தினசரி உயரும் பெட்ரோல் விலை – மோடியின் நூதன மோசடி

ஜூலை மாதம், சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ65.72. ஆகஸ்ட் மாதம் முடிவில் விலை ரூ 71.71. செப்டம்பர் மாதம் தற்போது விலை ரூ 72.95. இரண்டரை மாதத்திற்குள் 1லிட்டர் பெட்ரோல் விலையேற்றம் ரூ 7.23. மும்பையில் தற்போது 1லி பெட்ரோல் விலை ரூ 79.48.

இதே காலகட்டத்தில் குரூடாயிலின் சர்வதேச விலையானது அமெரிக்க டாலர் மதிப்பில் பேரலுக்கு $43 – $48.
2014ஆம் வருடம் ஆகஸ்ட் அமெரிக்க டாலர் மதிப்பில் 1 பேரல் கச்சா எண்ணெய் விலை $105. ஆனால் அப்போது சென்னையில் 1லிட்டர் பெட்ரோல் விலை 71.55.

எவ்வளவு பெரிய நூதன கொள்ளை மோசடி இது. பேரல் 100$ க்கு மேல விற்கும் போது விலை ரூ 71.55. தற்போது பேரல் $48க்கு விற்கும் போது 1லி பெட்ரோல் விலை ரூ 79.48.

தினசரி விலைன்னா சர்வதேச விலையின் படி விலையைக் குறைக்காமல் ஏற்றிக்கொள்ள மட்டும்ன்னு அர்த்தமா? பெட்ரோல் நிறுவனங்களின் கட்சி நிதிக்காக செய்கிறார்களா? ஜி.எஸ்.டி வந்தா விலை குறையும்ன்னு புளுகினா குறையாது சார்வாள். பெட்ரோல் விலை ஏத்திகிட்டே போனா எல்லா விலையும் ஏறிகிட்டே போகும்.

இதுவும் ஊழல் தான்.

– முத்துராமலிங்கம்சுப்பிரமணியன்

Leave a Response