பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்தது

பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்தே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்த மாற்றமுமின்றி, விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ரூ.93.11க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response