அன்னக்கிளிக்கும் களத்தூர் கிராமத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்..!


ஒரு கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் அக்கிராம மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். இறுதியில் வெல்வது மக்களா..? அல்லது போலீஸா…? என்பதுதான் புதிதாக உருவாகியுள்ள ‘களத்தூர் கிராமம்’ படத்தின் கதை. இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம்.

இந்தக் கதையைக் கேட்ட நடிகர் கிஷோர் தான் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட வேறு படத்தின் தேதிகளை மாற்றி, இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விரைவிலேயே படப்பிடிப்பைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார். சரண் கே. அத்வைதன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இசையமைத்துள்ளார்.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி படத்துக்கும் இந்தப்படத்திற்கும் மிகப்பெரிய நெருக்கம் உண்டு.. அன்னக்கிளி இளையராஜா இசையமைத்த முதல் படம்.. இந்த களத்தூர் கிராமம்’ இளையராஜாவின் இசையமைத்துள்ள 1001வது படம் ஆகும்.

Leave a Response