பிரசாந்த்துக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி..!


சாகசம் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாக அடுத்த படம் பற்றிய அறிவிப்பை தராமல் சைலன்ட் ஆக இருக்கிறார் நடிகர் பிரசாந்த்.. தற்போது இவர் இந்தியில் வெற்றிபெற்ற ‘ஜானி கத்தார்’ என்கிற படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது..

இந்தப்படத்தை வெற்றிச்செல்வன் இயக்கவுள்ளாராம். படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘பார்ட்டி’ படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

Leave a Response