சென்சாரை செமையாக கிண்டலடித்த இயக்குனர் ராம்..!


இயக்குனர் ராமின் படங்களை பற்றி அனைவருக்கும் தெரியும்.. கற்றது தமிழ், தங்கமீன்கள் என அவரது படங்கள் கொண்டாடப்பட்ட வேண்டிய ரகங்கள்.. அந்தவகையில் ராம் இயக்கத்தில் உருவாகி, நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் தரமணி. இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தணிக்கை குழுவினரின் பார்வைக்கு சென்ற இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது, ஆனால், இயக்குனர் ராம் அதை மறுத்து எந்த ஒரு வாக்குவாதமும் செய்யவில்லையாம். ஆனால் அவர்களின் செயலை கிண்டலடித்து போஸ்டராகவே அடித்துவிட்டார் ராம்..

அந்த போஸ்டரில், “தணிக்கை குழுவினரின் கூற்றுப்படி ஆண் ‘ரா’வாக மது அருந்தினால் ‘U/A’ பெண் ‘ரா’வாக மது அருந்தினால் ‘A’, ஆக தரமணி ‘A’” என கிண்டலான வாசகங்களில் தணிக்கை குழுவினரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராம்

Leave a Response