
சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருசில காட்சிகளில் பெண் வேடமிட்டு நடிப்பது வழக்கம் தான். அதைத்தாண்டி இன்னும் சில நடிகர்கள் கிட்டத்தட்ட தங்களது தோற்றத்தை பெண் போலவே மாற்றிக்கொண்டு படம் முழுதும் நடித்து ஆச்சர்யப்படுத்துவார்கள்.
கிட்டத்தட்ட பெண் போலவே வேடமிட்டதில் கச்சிதமாக பொருந்தியது விக்ரம், பிரசாந்த் ஆகியோருக்குத்தான். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சிவகார்த்திகேயன் ரெமோவில் அப்படி நடித்து ஆச்சர்யப்படுத்தினார். இப்போது பெண் வேடுமிடுவதில் விஜய்சேதுபதியின் முறை..
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, தற்போது இயக்கிவரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி ஷில்பா என்கிற பெண் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் பெண் வேடமிட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.. பார்ப்பதற்கு அசப்பில் பெண் போலவே இருக்கிறார் விஜய்சேதுபதி. இவர் தவிர மலையாள நடிகர் பஹத் பாசில், சமந்தா என முன்னணி நட்சத்திரங்களுடன் நதியா, காயத்ரி, பகவதி ஆகியோரும் நடித்துள்ளனர்..


