
குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது சரித்திர நிகழ்வு.. சுதா கொங்கரா இயக்கத்தில் பாக்ஸிங் வீராங்கனையாக ரித்திகா சிங்கும் பாக்ஸிங் கோச்சாக மாதவனும் ஆடுகளத்தை கண்முன் நிறுத்தினார்கள்.. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் புகழ்பெற்ற இந்தப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டது..
இந்தப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து வெற்றி கண்டார் இயக்குனர் சுதா கொங்கரா.. அதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர், அதை எழுதியும் முடித்துவிட்டாராம். இந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப்போக, தானே நடிக்கிறேன் என கூறியுள்ளாராம் சூர்யா. தற்போது தான் நடித்துவரும் தான சேர்ந்த கூட்டம் படத்தை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.


