
ஒருகாலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்துக்கு தற்போது போதிய அளவு படங்கள் இல்லை. நடித்த படங்களும் சொல்லிக்கொள்ளும்படியாக ஹிட் ஆவதில்லை. இதனால் நடிகர் பிரசாந்த், சொந்தமாக தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘ஜானி’ என்ற பெயர்சூட்டப்பட்ட இந்தப் படம் இந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில், பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபு, ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஏற்கனவே பிரசாந்த் நடிப்பில் வெளியான சாகசம் படமும் தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


