பாடல்களில் சதமடித்த சிம்பு..!


தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார் சிம்பு. அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி, ட்ரெண்டிங் ஆனதும் நடந்தது. ‘மோனிஷா என் மோனலிஷா’ படத்தில் முதல் பாடலை பாடிய சிம்பு, தன் பெருமையான இசை பயணத்தில் “என் ஆளோட செருப்ப காணோம்” படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையையும் பெற்றிருக்கிறார் சிம்பு.

நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் கொண்ட சிம்பு, சினிமாவில் நட்புக்காக அவ்வப்போது பாடி வருகிறார் தான்.. ஆனால் அது சத்தமில்லாமல் நூறு பாடல் என்கிற சாதனையை எட்டியுள்ளது என்றால் உண்மையிலேயே ஆச்சர்யம் தான்…

Leave a Response