விஜய் மற்றும் சிம்புவுக்காக அமித்ஷாவிடம் கோரிக்கை

திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

விஜய் நடித்த மாஸ்டர் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்களின் வெளியீட்டையொட்டி திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இது மத்திய அரசின் கொரோனா கால வழிகாட்டு முறையை மீறிய செயல் என்று மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.

அதோடு, நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்புவதற்கு எதுர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்தவழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பொங்கல் பண்டிகையையொட்டிய நாட்களிலாவது (சுமார் ஒரு வாரம்) நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response