விஷாலுக்குப் பெருமை தரும் பேராசிரியர் ராஜநாயகம் பாராட்டு


திரையரங்குகள் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் தின்பண்டங்கள் விற்பனை தொடர்பாகவும் விஷால் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு நிறைய ஆதரவுகள். இது தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் எழுதியுள்ள பதிவு……

விஷால்…
பொறுப்புகள் அதிகமாகும் போது சமூக அக்கறையும் அதிகமாக வெளிப்படுகிறது.

விஷால் சொல்லும் விதம் குறித்துத் திரையரங்க அதிபர்கள் சிலர் விமர்சனம் செய்தாலும், அவர் சொல்லும் விஷயங்கள் நிச்சயம் பாராட்டத்தகுந்தவை.

கடந்த சில ஆண்டுகளாகவே பல லட்சம் (கோடி?) பார்வையாளர்கள் மனதில் குமைந்து கொண்டிருந்த ஆதங்கங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றுக்குப் பொருத்தமான பதில் நடவடிக்கைகளை அவர் அறிவித்துள்ளார்.

இத்தனைக்கும், அவர் இட்டுள்ள பல “ஆணைகள்” இதுவரை அரங்க உரிமையாளர்கள் சட்டப்படி கடைப்பிடித்திருக்க வேண்டியவையே.

முதலில், walk through metal detector-ஐ தாண்டிய பிறகு, ஏதோ அதிதீவிரவாதிகளைச் சோதிப்பது போல, கையால் தடவி, அமுக்கிப்பார்த்து (உள்ளே தின்பண்டங்கள் மறைத்து வைக்கப் பட்டுள்ளனவா என) “சோதிக்கும்” தனிமனித உடல்மீதான வன்முறை உடனே நிறுத்தப்படும் என நம்பலாம்…
(இந்த அவமானத்தைச் சகிக்க முடியாமல், மல்டிப்ளெக்ஸ்-களைத் தவிர்ப்பவர்கள் பலர்.)

டெங்கு காய்ச்சல் தீயாய்ப் பரவிவரும் வேளையில், வீட்டில் கவனமாகக் காய்ச்சி வடிகட்டிய நீரைக்கூட. அனுமதிக்க மறுக்கும் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி விழும் என நம்பலாம்…

சாதாரணர்களின் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு, அம்மா குடிநீர் விற்கச் சொல்லும் “ஆணை” மதிக்கப்படும் என நம்பலாம்…

பாராட்டுக்குரியவை இன்னும் பல…
அவர் சொல்லும் எல்லாமும்தான்!

பொறுப்புகள் அதிகமாகும் போது சமூக அக்கறையும் அதிகமாக வெளிப்படுகிறது.

வாழ்த்துகள்.

Leave a Response