காளியம்மன் திருவிழாவில் தமிழீழ வரைபடம் – சிங்களர்கள் அதிர்ச்சி

தமிழீழத்தில், திருநெல்வேலி காளியம்மன் அலங்காரத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் தமிழீழ வரைபடத்தில், காளியம்மன் இருப்பதுபோல் சித்தரித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசாரியை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கழைத்துள்ளனர்.

திரு­நெல்­வேலி ஸ்ரீ காளி அம்­மன் ஆலய வரு­டாந்த அலங்­கா­ரத் திரு­விழா நடை­பெற்றுவரும் நிலையில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற 3ஆம் நாள் திருவிழாவின்போது காளி அம்­மன் புலி வாக­னத்­தில் தமிழீழத்தில் வலம்வரும் வகை­யில் அலங்­க­ரிக்­கப்­பட்டு அடி­ய­வர்­க­ளுக்கு காட்­சி­ய­ளித்­தார்.

இது தமிழ்மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் மற்றும் காணொளிகள் ஊடகங்களில் பிரசுரமானயின அதுமட்டுமின்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன.

அதனால் அதிர்ச்சி அடைந்த சிங்களர்கள், புலனாய்வாளர்களைக் களமிறக்கி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்மக்களை அச்சுறுத்தும் இந்தச் செயலுக்கு உலகத்தமிழர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response