விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் திமுகவுக்கு அழைப்பு – சட்டவிதியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகு​தி​களில் கட்​டா​யம் வெற்றி பெற்​றிருக்க வேண்​டும்.

தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டு, எந்தக் கட்​சி​யும் 118 தொகு​தி​களைப் பெற்​றிருக்​காத நிலை​யில், சனநாயக முறைப்​படி அரசி​யலமைப்புச் சட்​டப் பிரிவு​கள் 163 மற்​றும் 164 இன்​படி தமிழ்நாடு ஆளுநர் 4 வழி​முறை​களைக் கையாண்டு அரசி​யல் கட்​சிகளை ஆட்​சி​யமைக்க சட்ட ரீதி​யாக அழைப்பு விடுக்​கலாம்.

அதன்​படி,

1.தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாகச் சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்தக்
கூட்​ட​ணியை அழைக்​கலாம்.
2.அதிக இடங்​களைக் கைப்​பற்​றிய கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அக்​கட்​சியை அழைக்​கலாம்.
3.தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்​சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அழைக்​கப்​படலாம்.
4.வெளியி​லிருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்​கலாம்.

இந்த நான்கு வழி​முறை​களின்​படி ஆட்​சி​யமைக்​கப்​படும் பட்​சத்​தில், சம்​பந்​தப்​பட்ட கட்​சி​யின் சட்​டப்​பேரவைக் கட்​சித் தலை​வ​ராகத் தேர்​வானவர் முதலமைச்சராக நியமிக்​கப்​படலாம்.

அதன்​பிறகு அந்தக் கட்​சி​யின் முதலமைச்சர், அரசி​யலமைப்புச் சட்​டப்​பிரிவு 174 இன்​படி எஸ்​.ஆர்​.பொம்மை
வழக்​கில் உச்சநீதி​மன்​றம் 1994 இல் பிறப்​பித்த தீர்ப்​பின் அடிப்​படை​யில், அந்தக் கட்சி சார்​பில் சட்​டப்​பேர​வையைக் கூட்​டு​வார்.சட்​டப்​பேர​வை​யில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும்.

அந்தக் கட்சி தனிப்​பெரும்​பான்​மைக்​கான பலத்​தை, அதாவது 118 உறுப்​பினர்​களின் ஆதரவு தங்​களுக்கு இருக்​கிறது என்​பதை நிரூபித்​து​விட்​டால் அந்த ஆட்சி எந்​தவொரு பிரச்​சினை​யும் இன்றி தொடரும்.

ஒரு​வேளை, அந்​தக் கட்​சி​யால் பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அதற்கு அடுத்த இடத்​தில் உள்ள கட்சி
ஆட்​சி​யமைக்​கும் வகை​யில் தங்​களது பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்​பு​விடுப்​பார்.

அதன்​படி, அந்​தக் கட்சி தங்​களது பலத்தை சட்​டப்​பேர​வை​யில் நிரூபித்​து​விட்​டால் அந்தக் கட்சி ஆட்​சி​யமைக்​கும்.

இரண்​டாவ​தாக அழைக்​கப்​பட்ட கட்​சி​யும் ஆட்​சி​யமைக்க முடி​யா​விட்​டால் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பிரிவு 356 இன்​படி குடியரசுத் தலை​வர் ஆட்சி பிரகடனப்​படுத்​தப்​படும். அதன்​பிறகு மீண்​டும் புதி​தாக தேர்​தல் நடத்​தப்​படும்.

இதுதான் சட்டப்படியான விதிமுறைகள் எனும்போது, விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், அடுத்த பெரிய கட்சியாக இருக்கும் திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

Leave a Response