தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர், ஜஸ்டின் ஆண்டனி ராஜ், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்,
கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 4 மீனவர்கள் மற்றும் கேரளாவை சார்ந்த 1 மீனவர் என 5 மீனவர்கள் கத்தார் நாட்டிலுள்ள ஊசுப் அலி பினாலி என்ற முதலாளிக்கு சொந்தமான நவரஸ் என்ற விசைப்படகில் 16 செப்டம்பர் 2014 அன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது 22 செப்டம்பர் 2014 அன்று இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஈரான் நாட்டு கடலோர காவல்படையினர் இவர்கள் அனைவரையும் கைது செய்து இவர்களது படகுடன் ஈரானுக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இவர்களது விபரம் :
1. சசி (கேப்டன்) – வயது 42 தெ/பெ லூயிஸ், புனித அந்தோனியார் குருசடி வளாகம், சின்னத்துறை, கன்னியாகுமரி மாவட்டம்
2. ஆரோக்கியம் வயது 30 த/பெ ஸ்றீபன், மேலமணக்குடி, கன்னியாகுமரி மாவட்டம்
3. அந்தோனீஸ் வயது 34 த/பெ சம்மிக்கேல் , பூத்துறை,. கன்னியாகுமரி மாவட்டம்
4. ததையூஸ் வயது 37 த/பெ ஜோசப், புல்லுவிளை, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளா
5. ஆன்றணி வயது 29 த/பெ சூசை நாயகம், சின்னத்துறை, கன்னியாகுமரி மாவட்டம்
சிறைபிடிக்கபட்ட இவர்களது நிலை என்னவென்று தெரியாமல் இவர்களது குடும்ப்பத்தினர் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மீனவ மக்களை கண்ணின் மணிபோல காத்துவரும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இம்மீனவர்களின் உடனடி விடுதலைக்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டுகிறோம்


