அருவி ஆற்கும் கலைபயில் நனம்தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்,
கொழுங்கிழங்கு மிளிரக்கிண்டி கிளையொடு
கடுங்கண் கேளல் உழுத பூமி
நல்நாள் வரும்பதும் நோக்கிக் குறவர்
உலாஅது வித்திய பரூஉ குரல் சிறுதிணை
முன்பு விளையாணர் நாள் புதிது உண்மார்
மறையான் கறந்த நரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குளிசி
வான்கேள் இரும்படை கழாஅது ஏற்றி
சாந்த விறகின் உவித்த புன்கம்
வதளம் கவினிய குளவிமுன்றில்
செழுங்கோல் வாழை அகலிலை பகுக்கும்
ஊரகக்குதிரைக் கிழவ கூர்வேல்
நரைநார் கொடுத்த வேங்கை அம்கண்ணி
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ஈகை கடுமான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யாச் செந்தா நெளிய செத்திப்
பாடுப என்ப பரிசலர் நாளும்
ஈய்யா மன்னர் நான்
வீயாது பறந்த நின் வகையில் வான்புகழே. புறம் 168 பிட்டம்கொற்றனை கருவூர் கதம்பிள்ளை பாடியது.
பற்றிக்கூட்டம் மலையில் காந்தன் கிழங்க¬ உண்பதற்காக கிண்டி புருதியாக்கிய நிலர்ததில் குறவர் உலாஅது விதைத்த திணையானது முளைத்து வளர்ந்துவிளைந்த பின் நல்லநாள் பார்த்து அறுவடை செய்துகொண்டு வந்த திணையை ஒரு நல்லநாளில் பொங்கி கூதாளம் கவிந்து கிடப்பதால் அழகு பெற்று மலைமல்லிகையால் மனம் சிறந்து விளங்கும் முற்றத்தில் அகன்ற வாழைஇலையில் பிட்டம் கொற்றன் பகிர்ந்தளிப்பதாகக் கூறுகிறார்.


