
தமிழில் உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் மாதவனுடன் நடித்த ஜேஜே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நன்கு இடம்பிடித்தவர் பூஜா. அதன்பின் இயக்குனர் சீமான் இயக்கத்தில் உருவாகிய தம்பி படம் அவரை படிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்து.. பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’ படத்தில் நடித்து சிறந்த நடிகை என்கிற பெயரையும் தட்டிச்சென்றார்..
கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பூஜாவின் திருமணம் பற்றிய விபரங்கள் கிசுகிசுக்களாகவும் யூகங்களாகவும் மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது,. இந்நிலையில் இலங்கையில் தொழிலதிபராக இருக்கும் பிரசாந்த் டேவிட் வித்தகன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளாராம் பூஜா. இந்த திருமணத்தில் இருவரது குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்களாம்.


