
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கொடி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக இப்படத்தில் அரசியல்வாதி மற்றும் பேராசிரியர் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ்.
அன்பு மற்றும் கொடி ஆகியவை தான் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர்கள். மேலும், ‘கொடி’ தீபாவளிக்கு வெளியாகிறது என்பதை குறிக்கும் விதமாக ‘இரட்டை தீபாவளி’ என படக்குழு அறிவித்திருக்கிறது. அதற்கேற்றவாறு தற்போது ‘கொடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது. வீடியோ வடிவில் வெளியாகி இருக்கும் ‘கொடி’ போஸ்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.


