
கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
நாயகன், நாயகி ஒப்பந்தம் செய்யாமல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் பார்த்திபன். தற்போது தனது குருநாதர் பாக்யராஜ் மகன் சாந்தனு மற்றும் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் ஆகியோர் நாயகன், நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். “’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் சாயல் இதில் இருக்காது. இது வேறு ஒரு வித்தியாசமான களம். கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும்” என்கிறார் பார்த்திபன்.


