சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் – பார்த்திபன் அழைப்பு சேரன் ஆதரவு

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் நடந்த இந்தியா – சீனா மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் மதுரை மாவட்டம், கடுக்கலூரை சொந்த ஊராக கொண்ட பழனி என்ற வீரரும் வீர மரணம் அடைந்தார்.

இதனால், சீனாவுக்கெதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.இதையொட்டி நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

இந்திய ராணுவ வீரர் பழனி + 19 பேருக்கும் வீர வணக்கம் செலுத்தும் விதமாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம்!

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் கூறியுள்ளதாவது….

நான் சீனாவின் திரைப்படங்கள்கூட பார்ப்பதில்லை சார்.. Covid 19 போல பழனி+19 … கற்பனையை காலத்தோடு பொருத்தியது அருமை சார்..
எனது வணக்கங்களும் எம்மண்ணின் மைந்தனுக்கு..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவர்களின் இக்கருத்துகளுக்குப் பலர் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response