விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நடிகர் சங்கம் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் அது நிறைவேறாததால் சோர்வடைந்து போகின்றது.
நடிகர்கள் ஏதாவது கருத்து கூறினால் அதன் மீதான முரண்பாடு, விவாதம் அதிகமாகி விடுகிறது. நடிகர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் பிரச்னையை கவனிப்பதில்லை.
யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்ற ஜனநாயகத்தில் ஏற்கனவே பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின் வாங்கியுள்ளதால் விஜய் மீதும் அந்த சந்தேகம் உள்ளது. ஆனால் நமக்குள் உள்ள சந்தேகத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளார் நடிகர் விஜய்.இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து பின்வாங்கக் கூடும் என்று நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.