
கன்னியாகுமரியில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.அங்கு அவர் பேசும்போது, 10000 பேர் சேர்ந்து மனு அனுப்பினால் பதில் அளிப்பேன்.5 இலட்சம் பேர் சேர்ந்து அனுப்பினால் சட்டப்பேரவையில் விவாதிப்பேன் என்று பேசினார்.
இதனால் அரசியல் அறிவு சிறிதுமில்லாமல் விஜய் பேசியிருக்கிறார் என்று கடும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
சமூகவலைதளங்களில், அந்த 5 லட்சம் கையெழுத்தை யார் போய் வாங்குவது?
ஒரு தொகுதிக்கு இரண்டரை இலட்சம் வாக்காளர்கள் இருக்காங்க.அந்த மக்கள்கிட்ட பேசி, அவர்கள் தேவையைக் கேட்டு அரசிடம் கோரிக்கையாக வைத்து விவாதிக்கத்தான் எம் எல் ஏன்னு ஒருத்தரை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்புறாங்க.
ஒரு எம் எல் ஏவோட குறைந்தபட்ச வேலையே அதுதான்.நீ வீட்ல வெட்டியா உக்கந்திருப்ப.உன் வேலையையும் சேர்த்து மக்கள் செய்யணுமா?என்னடா கேனத்தனமான ஒரு வாக்குறுதி இது.மக்கள் எதுக்குடா 5 இலட்சம் பேர் கிட்ட பேசி கையெழுத்து வாங்கி அதை சட்டமன்றத்துக்கு அனுப்பணும்? அப்ப நீ எதுக்கு இருக்க? எம் எல் ஏக்கள் எதுக்கு இருக்காங்க?
– இதுபோன்ற ஏராளமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இதி மேற்கோள் காட்டி இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது…
தொகுதிக்கு ஓட்டுக் கேட்டு வரும்போது ஏதாவது பேசுங்க விஜய்னு சொன்னோம்.ஆனா இப்படிப் பேசுவார்னு நினைக்கல.பாவம்.அவருக்கு எம் எல் ஏக்கு என்ன வேலைன்னே தெரியல.ஒவ்வொரு பிரச்னைக்கும் கையெழுத்துப் போட்டுப் போட்டு கொடுத்துட்டே இருந்தா விடிஞ்சிரும்.சரி விடுங்க.யானை அதன் தலையில் அதுவே. Better luck to next time
இப்போ தவெக கன்னுக்குட்டிகள் படை சேர்ந்துவந்து கெட்ட கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிப்பாங்க.நம்ம நம்ம வேலைய பார்க்கலாமா நாதக செயல்வீரர்களே.வெற்றி நம் கையில் வாங்க.விஜய்யின் இன்றைய பேச்சு நமக்கு அறுவடை ஆக வாய்ப்பிருக்கு.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


