திமுக எதிர்த்த விபிஜிராம் திட்டத்தை அப்படியே ஏற்ற விஜய் – மக்கள் அதிர்ச்சி

2025 டிசம்பர் மாதத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தை (MGNREGA) இரத்து செய்து,அதற்குப் பதிலாக ‘விபி ஜி ராம் ஜி’ (VB-G RAM G) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தப் புதிய திட்டத்திற்கு எதிராக,2025 சனவரி 23 ஆம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழ்நாடு மட்டுமின்றி பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களும் அத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றின.

அந்தத் திட்டத்தில்,மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை மட்டுமின்றி மாநில உரிமையைப் பறிக்கும் உத்தரவுகளும் இருந்தன.

மகாத்மா காந்தியின் பெயரை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து நீக்கியது மட்டுமின்றி,100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு முன்பு 100% நிதியை ஒன்றிய அரசே வழங்கி வந்தது.ஆனால் புதியதிட்டத்தில் 60:40 என்ற விகிதத்தில் மாநில அரசுகள் 40% நிதியைச் செலவிட வேண்டும்.இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

ஓராண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,மாநிலங்கள் தங்களுக்கான வேலைத்திட்ட வழிமுறைகளைத் தாங்களே வகுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில்,

இத்திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடரவும், மாநிலங்களின் நிதியாதாரங்களைப் பாதுகாக்கும் வகையில் நிதியளிப்பு முறையை பழையபடி திருத்தி அமைக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தியது.

இந்தத் தீர்மானம் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,நேற்று தில்லியில் நடந்த நிதி ஆயோக் எனும் திட்டக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய்,
மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று பேசியுள்ளார்.

இதன்மூலம்,மகாத்மா காந்தி பெயரை நீக்கிய அந்தத் திட்டத்தை,மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் அந்தத் திட்டத்தை,மாநிலங்களின் உரிமையைப் பறிக்கக்கூடிய அந்தத் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னதோடு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மண்டியிட்டுள்ளார் என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

– பெரியசாமி

Leave a Response