
திமுக ஆட்சியில்,டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10 அதற்கு மேலும் விற்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தன.
இப்போது புதிய ஆட்சி அமைந்தும் அது தொடர்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.
அப்போது அந்தக் கூடுதல் பணம்,அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுகவினருக்குக் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஆட்சி மாறியும் அந்த நிலை மாறவில்லை என்று குடிகாரர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.அதனால், இப்போது அந்தப்பணம் யாருக்குப் போகிறது? என்கிற கேள்வி அனைவராலும் கேட்கப்படுகிறது.
ஆனால்,அதற்குப் பதில் சொல்வார் யாரும் இல்லை.
இந்நிலையில்,இச்சிக்க்ல் குறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் புதிதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
அவர்களுடைய பதிவில், ‘டாஸ்மாக்கில் எத்தனை கடைகள் இருக்கிறது என்று சொல்லக்கூட முடியாத இன்றைய அரசு,எப்படி வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என மக்கள் நம்புவார்கள்?
டாஸ்மாக் நிறுவனம் பற்றிய உண்மைத் தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாதா? பாட்டிலுக்கு பத்துரூபாய் என்று பாட்டெல்லாம் பாடி,அன்று 41 உயிர்கள் போனது எல்லாம் நினைவில் இல்லையா முதல்வர் விஜய்?
இப்போது உங்கள் ஆட்சியிலும் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவதாக வரும் குற்றச்சாட்டுக்கு எப்போது பதில் வரும்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனால்,நடிகர் விஜய் ஆட்சியில் பாட்டிலுக்கு இருபது ரூபாய் வாங்குகிறார்கள் என்கிற தகவல் வெளிப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இப்போது கூடுதலாக வாங்கும் இந்தப்பணம் யாருக்குப் போகிறது? என்று
சமுதாய ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


