
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள், தமாகா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 28,சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ளார்.
இதில், ஜி.செந்தமிழன், சி.சண்முகவேல் ஆகிய இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் வாய்ப்பளித்துள்ளார்.
11 வேட்பாளர்கள் விவரம்….
1.திருவையாறு: வி.வேலு கார்த்திகேயன்,2.காரைக்குடி: தேர்போகி வி.பாண்டி,3.நாங்குநேரி: ஆர்.இசக்கிமுத்து,
4.ஒட்டப்பிடாரம் (தனி) : இரா.சுந்தர்ராஜன்,5.சைதாப்பேட்டை:ஜி.செந்தமிழன்,6.திருப்பத்தூர்: ஞானசேகரன்,
7.மன்னார்குடி:எஸ்.காமராஜ்,8.பூவிருந்தவல்லி: ஏழுமலை,பெரியகுளம் (தனி): கே.கதிர்காமு,10.மடத்துக்குளம்: சி.சண்முகவேல்,11திருச்சி மேற்கு:எம்.ராஜசேகரன்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் டிடிவி.தினகரன்.தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தையில் அந்தத் தொகுதியை வலியுறுத்திக் கேட்டார் என்றும் அப்படியும் அது கிடைக்கவில்லை என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அவர் போட்டியிடாதது அவருடைய கட்சியினரிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.


