
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
தூய சக்தி என்று கூறி வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் என்னென்ன குறுக்கு வழிகளை முயற்சி செய்து ஆட்சி அமைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றைக்கு முதல்வரும்,அவரது அமைச்சர்களும் தினம் தினம் சினிமா கதைகளை போல் ரீல்
விட்டுக்கொண்டிருக்கின்றனர்.தனது எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ளவும்,எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்களை தாக்கிப் பேசுவதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவும் கார் கொடுப்பதாக கூறி,ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்.
என்னையும்,சசிகலாவையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் பலரும்
எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.அவர்களது விருப்பம் நியாயமானதுதான்.
ஆனால்,எடப்பாடி பழனிச்சாமி மீது குறைசொல்வதைக் காட்டிலும்,கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு
வருவதற்கு என்ன செய்யவேண்டுமோ? அதை உள்ளிருந்து அவரோடு பேசி சரிசெய்யவேண்டும்.
அமமுகவும்,அதிமுகவும் வேறு அல்ல.இரண்டுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சிகள்தான்.நான்
இப்போதும் அதிமுகவுடன்தான் நிற்கிறேன்.எப்போதும் அதிமுகவுடன் ஒரு தொண்டனாக உறுதுணையாக
நிற்பேன்.மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலரவேண்டும்.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.


