இந்திய ஒன்றியத்தில் முதன்முறையாக.. – கொரோனா தடுப்பூசி தமிழ்நாடு அரசு அதிரடி

உலகத்தை உலுக்கிய கொரோனாவுக்கு நிரந்தரத் தீர்வு தடுப்பூசி என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்திய ஒன்றியம் உட்பட உலகெங்கும் தடுப்பூசி செலுத்தும் வேலை வேகவேகமாக நடக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசாங்கம் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் தமிழக அறக்கட்டளை சார்பில் ரூ.2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,,,,,

அமெரிக்கா வாழ் தமிழர்களின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.36கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் 15 அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பப்படும். தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துமாற்றுத் திறனாளிகளுக்கும், அரியலூர்மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி நாளை (ஆகஸ்ட் 23) முதல் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Response