கி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

கி.வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன், வேல்முருகன் உட்பட பலர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில்….

தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார, சுகாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனிநபரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி கொண்டிருக்கிறது இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாகத் தொற்றி உயிரிழப்பில் கொண்டுபோய் விட்டு விடும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது இட நெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக் கடுமையான நெருக்கடியில் தள்ளிக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் சிறையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கைதிகள் கூட்டமாக இருப்பதால், அங்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை விடுவிக்க உத்தரவிட்டது. விசாரணை கைதிகளை, பிணையிலோ அல்லது பரோலிலோ விடுவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எது போன்ற குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க அந்தந்த மாநிலங்கள், உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உத்தரபிரதேச சிறைகளில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை அடுத்த 8 வாரங்களுக்கு ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா , பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறையாளர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் சிறையாளர்களை விடுவித்து வருகின்றன.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 18 ,000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், 30 சதவீதம் பேர் தண்டனைக்
கைதிகளாகவும் உள்ளனர்.

இவர்களில் தமிழக அரசு ஏறத்தாழ கடந்த 10 நாட்களில் 3163 விசாரணை சிறைவாசிகளை விடுவித்துள்ளது. இன்னும் 10,000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் சுகாதார வசதி இல்லாத சிறைச்சாலைகளில் நெருக்கடியோடு கொரோனா உயிர் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

பேராபத்தை விளைவிக்கும் இந்தச் சூழ்நிலையில் சிறையாளர்களை விடுவிப்பதில் தமிழக அரசு எவ்வித அரசியல் பாரபட்சமும், மத வேறுபாடும் காட்டக்கூடாது என சமூக அக்கறையுள்ளவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அரசியல் சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசு மறுத்து வருவது வேதனை தருவதாக உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு நீண்ட நாள் பரோல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல 40க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலம் சிறையில் இருப்பதால் கடுமையான நோய்களோடே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்த்தேசியத் தோழர்களும் மாவோவியத் தோழர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று கூறி பல சமூகச் செயல்பாட்டாளர்களும் பல ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் கிடக்கின்றனர். நீண்ட நாட்களாக சிறையில் வாடும் அவர்களுக்கு இது பேராபத்தை விளைவிக்கும் .

நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறையாளிகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான நோய்த் தொற்று இருப்பதால் அவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. இது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தமிழக சிறைகளில் கைதிகள் மிகவும் இட நெருக்கடியில் தான் இருந்து வருகின்றனர்,சுகாதாரம் இல்லாமலும், மருத்துவமனை வசதிகளும் இல்லாமல் தான் இருந்து வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் 7 தமிழர் உள்ளிட்டு அரசியல் சிறைவாசிகளையும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் மற்றும் பிற அரசியல் சிறைவாசிகளையும் பிணையிலோ அல்லது நீண்டகால விடுப்பிலோ விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

1.கி.வீரமணி, திராவிடர் கழகம்

2.பழ.நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணி

3.கொளத்தூர் தா.செ.மணி, திராவிடர் விடுதலைக் கழகம்

4.கோவை .கு. ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

5.தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

6.இரா. அதியமான், ஆதித்தமிழர் பேரவை

7.பேரா.ஜவஹிருல்லா தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

8.பொழிலன், தமிழக மக்கள் முன்னணி

9.கி வெங்கட்ராமன் , தமிழ்த் தேசியப் பேரியக்கம்

10.பூ.சந்திரபோஸ், தியாகி இமானுவேல் பேரவை

11.அன்புத் தென்னரசன், நாம் தமிழர் கட்சி

12.சுப.உதயகுமார், பச்சைத் தமிழகம் கட்சி

13.வாலாசா வல்லவன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

14.அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் புரட்சி கழகம்

15.புதுக்கோட்டை பாவாணன்

16.எஸ்.டி. கல்யாணசுந்தரம் , ஆதித்தமிழர் மக்கள் கட்சி

17.கே.எம். ஷெரீப், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி

18.திருமுருகன் காந்தி, மே17 இயக்கம்

19.நெல்லை முபாரக், எஸ்.டி.பி.ஐ

20.தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

21.நாகை. திருவள்ளுவன், தமிழ்ப் புலிகள் கட்சி

22.குடந்தை அரசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி

23.இயக்குநர். புகழேந்தி தங்கராசு

24.மீ.த. பாண்டியன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி

25.கண. குறிஞ்சி, மக்கள் சிவில் உரிமை கழகம்

26.இயக்குநர் மு. களஞ்சியம், தமிழர் நலம் பேரியக்கம்

27.இயக்குநர் வ.கௌதமன், தமிழ்ப் பேரரசு கட்சி

28.ஆழி. செந்தில்நாதன், தன்னாட்சித் தமிழகம்

29.செல்வமணியன் , தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி

30.நிலவழகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

31.தமிழ்நேயன், தமிழ்த் தேச மக்கள் கட்சி

32.வெண்மணி, திராவிடத் தமிழர் கட்சி

33.வழக்கறிஞர் பா.புகழேந்தி, தமிழர் கட்சி

34.நாகராசன், ஆதித் தமிழர் முன்னேற்ற கழகம்

35.தமிழ்.முகிலன், தமிழர் கழகம்

36.துரைசிங்கவேலு, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி

37.கி.வெ. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

39.இ.அங்கயற்கண்ணி, தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம்

40.கா.சு நாகராசன், தமிழ்நாடு திராவிடர் கழகம்

41.செள.சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலைக் கழகம்

42.செந்தில், இளந்தமிழகம் இயக்கம்

43.செல்வி, மனிதி

44.செ.இளையராஜா, தமிழ்நாடு மக்கள் கட்சி

45.செயப்பிரகாசு நாராயணன், தமிழர் முன்னணி

46.மாந்தநேயன் , தொழிலாளர் போராட்ட இயக்கம்

47.இரா.தமிழ்ச்செல்வன், தமிழர் கழகம் கட்சி

48.பாவெல், இ.இ.இளைஞர் மாணவர் இயக்கம்

49.கரு. தமிழரசன், தமிழ்ச் சிறுத்தைகள் கட்சி

50.மருதுபாண்டியன், சோசலிச மையம்

51.காஞ்சி அமுதன், ஐந்தினை கலை பண்பாட்டு இணையம்

52.நாகராஜ், சமூக நீதி கட்சி

53.திருமலை தமிழரசன் , தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்

54.சின்னப்பாத் தமிழர் , தமிழ்வழிக் கல்வி இயக்கம்

55. காந்தி , ஏழு தமிழர் விடுதலைக் கட்சி

56.சிவ.செந்தமிழ்வாணன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்.

57.க.இரா.தமிழரசன்

ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Leave a Response