4 சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

இதையடுத்து 4 தொகுதிகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுடனேயே வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலின் 7 ஆவதுகட்ட வாக்குப்பதிவு நாளான மே 19 ஆம் தேதியன்று சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதற்கான வேட்பு மனு தாக்கல் ஏபரல் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29 ஆம் தேதியாகும். ஏப்ரல் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் மே 2 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.

4 தொகுதிகளிலும் மே 19 ஆம் தேதியன்று பதிவாகும் வாக்குகள், மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி,

திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன்,

சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி,

ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி சண்முகையா

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Response