மதுரை திமுக கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சமுத்திரக்கனி பரப்புரை

மதுரை நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக நடிகரும்,இயக்குநருமான சமுத்திரகனி வாக்கு சேகரித்தார்.

அப்போது சமுத்திரகனி பேசியதாவது….

மதுரை மக்களின் பிரச்சினையை மக்கள் கூடவே இருந்து தீர்வு காணும் மிக எளிமையான மனிதர் தான் வெங்கடேசன். கட்சிக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு, நட்புக்காகவே நான் வாக்கு சேகரிக்கிறேன்.

கீழடி வரலாறு மறைக்கப்பட இருந்தது. அதனை இந்த உலகிற்கு சொன்னவர் வெங்கடேசன். காவல் கோட்டம் மூலம் மதுரையின் வரலாறை எடுத்து சொன்னார். மக்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பார். அவர் வெற்றி பெற்றால் நாம் வெற்றி பெற்றதாக அர்த்தம். எனவே முதல் தலைமுறை வாக்காளர்கள் வெங்கடேசனுக்கு ஆதரவளித்து, என் நண்பரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்கெனவே இயக்குநர் கரு.பழனியப்பன் பரப்புரை செய்தார்.
இப்போது சமுத்திரக்கனி பரப்புரை செய்திருக்கிறார். இன்னும் பல திரைத்துறையினர் அவருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response