ரஜினி திடீர் பாராட்டு கமல் நன்றி – பாராளுமன்றத் தேர்தல் கணக்கா?

பிப்ரவரி 24 ஆம் தேதியுடன், நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, ஓராண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, அக்கட்சி சார்பில் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவை நடந்துவருகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில்….

கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

என்று வாழ்த்தியிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து கமல் வெளியிட்டிருக்கும் ட்விட்டரில்…

நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே
நாளை நமதே.

என்று கூறியிருந்தார்.

அண்மையில் ரஜினி என்னை ஆதரிப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கமல் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ரஜினி வாழ்த்தும் அதற்குக் கமலின் நன்றியும் இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Leave a Response