
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பிக் பாஸ் சீசன் 2 இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதில் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இதுவரை பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, அவரது மனைவி கலந்துகொள்ளப்போவதாக உறுதியான தகவல் வெளிவந்தாலும், அவர்களைத் தவிர நடிகர் பரத் மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, தினமும் பிக் பாஸ் 2 குறித்த செய்திகள், புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பது போன்ற வீடியோ அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் கலந்துகொள்கிறார். இதனை உறுதிப்படுத்தி தொலைக்காட்சி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
அதில், நடிகர் கமல்ஹாசன் 17வது ஆள் வரவிருக்கிறார் என நடிகை ஓவியாவை வரவேற்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் மக்களின் மனம் கவர்ந்தவராக வலம் வந்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் நடவடிக்கையால் ஓவியா ஆர்மி உருவாகி இணையத்தைக் கலக்கியது. இதற்கிடையே மீண்டும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


