ஹர்பஜன்சிங்கின் உருக்கமான தமிழ் பதிவு

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு தமிழ் மொழி மீது ஆர்வம். சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தமிழில் பல டுவீட்களை பதிவு செய்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் தங்கள் அப்பாக்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் மொழியில் தான். மிகவும் உருக்கமான வரிகளுடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட #அப்பா…

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response