
ஏப்ரல் 12,2018 அன்று பிரதமர் மோடியின் தமிழக வருகையை கடுமையாக விமர்சிக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கறுப்புக் கொடியை எதிர்கொள்ளத் தயார் என்றால், பிரதமர் தமிழகத்துக்குள் சாலை மார்க்கமாக வந்து செல்லட்டும். தமிழக சாலையில் பயணிக்க கூட முடியாத கோழை பிரதமர்.
56 இஞ்ச் அகல மார்பு கொண்ட பிரதமர் வீராதி வீரர் என்றால் தமிழக சாலையில் பயணிக்கலாமே. மாமல்லபுரத்திற்கும், ஐஐடி.,க்கும் ஹெலிகாப்டர் மூலம் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து சுற்றுச்சுவரை உடைத்து அதில் போடப்பட்ட பாதையில் கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு செல்லவிருக்கிறார்.
மோடியை போன்ற பயந்தாங்கொள்ளி பிரதமர், இதுவரை இந்தியாவில் கண்டதில்லை. நாங்கள் என்ன கறுப்புக் கொடியில் குண்டு வைத்து உங்களைச் சுடவா போகிறோம்?
நீங்கள் முசோலினியை போல் மாறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் முசோலினியைப் போன்று உங்களுக்கு தைரியம் இல்லை. ஹெலிகாப்டருக்குள் ஒளிந்து, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக செல்கிறீர்கள். மோடி..நீங்கள் கறுப்புக் கொடியை பார்த்து பயப்படுகிறீர்கள். நீங்கள் நெஞ்சுரம் உள்ள பிரதமராக இருந்தால் சாலை மார்க்கமாக வாருங்கள். வர மாட்டீர்கள். இவ்வாறு வைகோ பேசினார்.


