
முன்னாள் அமைச்சர் டிஆர்.பி.ராஜா நேற்று ஒரு பதிவை வெளியிட்டார்.அந்தப்பதிவில்….
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான #பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது!
தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாம் #TVK அரசு!
இரட்டை ஓடுபாதைகள், சரக்கு முனையம், MRO வசதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கான நிலப்பரப்புடன் நமது தமிழக அரசுக்கு சொந்தமான TIDCO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக இருந்த பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தது, மீனம்பாக்கம் #சென்னை விமான நிலையத்தைக் கைப்பற்றப் போகும் தனியார் நிறுவனத்தின் வருங்கால வருமானத்தையும் ஏகபோக லாபத்தையும் பாதுகாக்கவா?
அந்தக் கடிதத்தை மூடி மறைத்தது ஏன்?
#ParandurAirport #ChennaiAirport
‘சென்னை ஏர்போர்ட் நிர்வகத்தை தனியாருக்கு மாற்றுக’: ஆகஸ்டில் மோடிக்கு விஜய் எழுதிய கடிதம் வெளியாகி ஷாக் http://tamil.indianexpress.com/tamilnadu/tn-g…
T.N. government writes to PM Modi seeking to change the operator of Chennai airport http://thehindu.com/news/cities/ch…
இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இதில்,தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும்,தி இந்து ஆங்கில இணையதளத்திலும் அதுகுறித்த செய்தி வெளியாகியிருக்கிறது என்றும் அவர் சுட்டியிருந்தார்.
அந்த இணைப்புக்குள் சென்று பார்த்தால்,செய்திகள் இல்லை,நீக்கப்பட்டிருக்கின்றன.
ஏன் அவை நீக்கப்பட்டன? என்பதற்குரிய எந்த விளக்கமும் இல்லை.தவறான செய்தியெனில் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.அப்படியும் நடக்கவில்லை.ஆளும்கட்சியின் மிரட்டல் காரணமாக அச்செய்தி நீக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை.
இச்சிக்கலில் ஒன்றிய அரசு,மாநில அரசு ஆகிய இரண்டு ஆளுங்கட்சிகளுமே சம்பந்தப்பட்டிருப்பதால் யார் மிரட்டினார்கள்? என்பதும் தெரியவில்லை.
மொத்தத்தில் இப்போது அந்தச் செய்தி இல்லை.
இப்போது,தவெக அரசிடமிருந்தோ,பாஜக அரசிடமிருந்தோ,எதனடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னீர்கள்? என்று கேட்டால்,டிஆர்பி.ராஜா என்ன சொல்வாரோ?
– அரசன்


