மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில்,எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2026 ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது,அதிமுக கூட்டணியில் இருந்தது பாமக.அப்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து பாமக போட்டியிட்டது.இப்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிக்க பாமக மறுத்துள்ளது.இதனால் பாமக அதிமுக கூட்டணி முறிந்துள்ளது.


