தமிழக அரசுப் பேருந்துகளில் வடமாநிலத்தவருக்கு வேலை – அமைச்சர் ஒப்புதல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள் மலைக்கோயிலுக்கு அரசுப்பேருந்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள்,பணியாளர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து,இங்கேயே படித்து திருமணமாகி இருந்தால்,அவர்களுக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.அரசு பஸ்சில் கட்சியின் வண்ணம் அடித்து,கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற வண்ணம் இருந்துள்ளது.அரசு பஸ்களை போல் தனியார் பஸ்களிலும் பெண்களின் இலவச பயணத்திற்கு,அதற்கான தொகையை அரசு வழங்கினால் நாங்களும் இலவசமாக இயக்கத் தயாராக இருக்கிறோம் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாக நீங்கள் கேட்பது பற்றி எனக்கு எந்தத் தகவலும் இல்லை.வந்தால் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்கிற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response