வெல்லும் தமிழீழம் மாநாட்டில் கலந்துகொள்வோர் பட்டியல்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடக்கவுள்ளது.

இதுகுறித்து,

தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும் என்று மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாநாட்டில், மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

தமிழீழத்திலிருந்து அனந்திசசிதரன், சிவாஜிலிங்கம், சுரேஷ்பிரேமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர்மணி, பெ.மணியரசன், பொழிலன், கோவை ராமகிருட்டிணன், காசி ஆனந்தன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழகத்தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

திரைப்பட இயக்குநர்கள், அமீர், கரு.பழனியப்பன், மு.களஞ்சியம், பா.இரஞ்சித், கார்த்திக்சுப்புராஜ், பிரம்மா, மன்சூரலிகான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Leave a Response