வாரிசு நடிகர்கள் ஹீரோக்களாக களமிறங்கும் வரிசையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் தற்போது ‘ஆதி’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்தப்படம் ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று வெளியாக இருக்கிறது. ஒருபக்கம் படத்தை வெளியிடும் பணிகளும், புரமோஷன் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் படத்தின் ஹீரோ பிரணவ் ஊர் சுற்ற இமயமலை பக்கம் சென்றுள்ளாராம்.
அதுமட்டுமின்றி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ள போவதில்லை என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் இமயமலை கிளம்பினாராம் பிரணவ். ஆக ‘தல’ அஜித் இப்போது என்ன பாணியை தொடர்கிறாரோ, அதே ரூட்டைத்தான் மோகன்லாலின் மகனும் பிடித்துள்ளார்.