ரஜினியே பார்க்க விரும்பும் படம் அக்-27ல் ரிலீஸ்..!


தமிழில் வெளியாகும் முக்கியமான படங்களை மட்டுமல்ல, பிறமொழிகளில் வெளியாகும் நல்ல படங்களையும், நண்பர்களின் படங்களையும் கூட சூப்பர்ஸ்டார் ரஜினி பார்த்துவிட்டு பாராட்டி வருவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் இந்தமுறை அவர் பார்க்க விரும்பும் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது மலையாளத்தில் தயாராகியுள்ள ‘வில்லன்’ படத்தைத்தான்.

மோகன்லால் நடித்துள்ள இந்தப்படம் வரும் அக்-27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரஜினி இந்தப்படத்தை பார்க்கவேண்டும் என விரும்புவதற்கு இது மோகன்லால் படம் என்பதையும் தாண்டி முக்கியமான காரணம் என்றால் அது நடிகர் விஷால் தான். ஆம். இந்தப்படம் மூலம் விஷால் முதன்முறையாக மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார்

அதனால் அப்படி என்ன கதையாக இருக்கும் இந்தப்படம் என்கிற ஆவல் அவருக்கு இயல்பாகவே எழுந்துள்ளதாம். இரண்டாவது இந்தப்படத்தை தயாரித்துள்ளவர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.. ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை தயாரித்தவர். இந்த இருவருக்காகவும் தான் இந்தப்படத்தை முக்கியமாக பார்க்க விரும்புகிறாராம் ரஜினி.

Leave a Response