விஜய்யின் திடீர் திருச்செந்தூர் பயணம் பிரம்மமுகூர்த்த தரிசனம் – திடுக்கிடும் காரணம்

நடிகரும் தவெக தலைவருமான விஜய், இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று பிரம்ம முகூர்த்த தரிசனம் எனும் அதிகாலை சாமி தரிசனம் செய்துள்ளார்.

முன்னதாக, சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் நள்ளிரவில் மதுரைக்குச் சென்றார்.மதுரையிலிருந்து மகிழுந்து மூலம் திருச்செந்தூர் சென்றார்.

அங்கு மேல்சட்டையில்லாமல் பூரண கும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

அந்த தரிசனம் மூலம் என்ன நடக்கும்? என்பதற்கு ஆன்மீகவாதிகள் கூறுவதாவது…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த நேரத்தில் (விஸ்வரூப தரிசனம்) முருகனை தரிசிப்பது மிகவும் விஷேசமானது. இந்த நேரத்தில் தரிசனம் செய்வது கர்ம வினைகளை போக்கி, மனதில் அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் (Positivity) அளிக்கும் என நம்பப்படுகிறது.
பிரம்ம முகூர்த்தத்தில் சுவாமியை தரிசிப்பதன் மூலம் மன அமைதி, தீராத நோய்கள் நீங்குதல் மற்றும் செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இவ்வாறு ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்.

அதேநேரம்,அவருடைய திடீர் திருச்செந்தூர் பயணத்துக்குப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

அவை என்னென்ன?

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின்னர் அவர் அங்கு சென்றிருப்பதால் தேர்தல் வெற்றிக்காக வேண்டுதல் மேற்கொண்டார் என்று சிலர் சொல்கிறார்கள்.

ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது.தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் சான்றிதழ் கிடைத்துவிடும் என்று நினைத்தால் இப்போதும் கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.அதற்காக சாமி தரிசனம் செய்யப் போனார் என்று சிலர் சொல்கிறார்கள்.

அவரைப் பற்றி நன்கறிந்த இன்னும் சிலரோ, விஜய்க்கு குடும்பவாழ்வில் பல சிக்கல்கள்,மனைவி விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறார்.மனைவி மட்டுமின்றி மேலும் இரண்டு பெண்மணிகளால் அவர் கடும் மன உளைச்சலைச் சந்தித்துவருகிறார்.அவற்றிலிருந்து மீளவும் செய்த பாவங்கள் தீரவும் பிரம்மமுகூர்த்த தரிசனம் செய்ததாகச் சொல்கிறார்கள்.

இவற்றில் எது முழு உண்மை என்பது விஜய்க்கு மட்டுமே வெளிச்சம்.

Leave a Response