
சமையல் எரிகாற்று உருளைகளை வழங்கும்,பாரத் ஹிந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பை வைத்து ஒவ்வொரு மாதமும் உருளையின் விலையை நிர்ணயம் செய்கின்றன.
அதனடிப்படையில், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட உருளை விலை இன்று(ஆகஸ்ட் 1)
ரூ.200 குறைந்துள்ளது.
கடந்த மாதங்களில் உருளை விலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய்யினுடைய விலையின் அடிப்படையில் ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனையாகிறது.அதே நேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக உருளை விலை எந்தவித மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம்,19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு உருளையின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.3,283-ஆக இருந்தது.இப்போது அந்த வணிக உருளையின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்தது. மாதத்தின் முதல்நாளில் உருளை விலை நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில் வணிகப் பயன்பாட்டிற்கான உருளை விலை ரூ.200 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால்,உருளை விலை உயர்வு காரணமாக உயர்த்தப்பட்ட விலைகள் குறையுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
