என் மார்க்கெட் என்ன தெரியுமா? – மாணவர்களிடம் எகிறிய நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் பற்றி சேலத்தைச் சேர்ந்த ஆடலரசன் என்கிற மாணவர் எழுதிய செய்தி சமூகவலைதளங்களில் பரவலாகக் காணக்கிடைக்கிறது. அதில்,

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் சென்னையில் ஒரு திரையரங்கிற்கு சென்றதாகவும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது ஒரு குடும்பத்தார் எழுந்து நிற்கவில்லை என பொங்கு பொங்கென பொங்கி facebook live வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.

கடந்த 2016ல் எங்கள் வேளாண் கல்லூரியில் முத்தமிழ் விழாவிற்கு ஏதேனும் ஒரு திரைக்கலைஞரை அழைக்கலாம் என முடிவு செய்தோம். நடிகர் என்றால் ஒரு ஈர்ப்பு இருக்கும், அவர்களை அழைத்து ஏதேனும் மாணவர்களை உற்சாகபடுத்தும் விதமாக பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த முடிவு.

சிறப்பு அழைப்பாளராக வருபவர் நல்ல விஷயம் பேசுறவரா வரணும் யாரை அழைக்கலாம் என யோசித்த போது நடிகர் பார்த்திபனுக்கு முயற்சி செய்தோம்.

எங்களுடையது அரசுக் கல்லூரி. எல்லோருமே மெரிட் மாணவர்கள். விழாவுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை மூன்று லட்சம் (உணவு, அலங்காரம், மைக்செட் உட்பட ). பார்த்திபனிடம் விழா பொறுப்பாளர் தொடர்பு கொண்ட போது 4 லட்சம் ரூபாய் தனக்கு தரவேண்டும் என்றவுடன் தூக்கி வாரிப் போட்டது.

அதுவரை சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பணம் தரவேண்டும் என்பதே தெரியாது. அப்ப மாணவர்களே, இளைஞர்களே என்றதுலாம் லுலுலாய் தானா என நினைத்துக்கொண்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, மாணவர்களின் நிலை என எல்லாவற்றையும் எடுத்துக்கூறி ஒரு 50- 1 லட்சம் வரை பேசினோம். அதற்கு அவர் கூறிய பதில் ” எனக்குனு ஒரு மார்க்கெட் இருக்கு.. அதலாம் விட்டுக் கொடுக்க முடியாது” என்று திமிருடன் பேசிவிட்டு போனை வைத்து விட்டார்.

பிறகு கவிஞர் பா.விஜய், குரல் வித்தகர் kpy நவீன், டெல்லி கணேஷ் ஆகியோரை அழைத்து விழாவை நடத்தினோம். ஒரு வேளாண்மை மாணவர்களிடம் பேசுவதற்கே 4 லட்சம் இலஞ்சம் கேட்ட பார்த்திபன் தான் இன்று தேசபக்திப் பாடம் எடுக்கிறார். பார்த்திபன் மீதான மரியாதை அடியோடு அழிந்துவிட்டது.

இவ்வாறு அந்த மாணவர் கூறியிருக்கிறார்.

Leave a Response