கேரளா வந்த தனுஷை பார்க்க பஸ் பிடித்து வந்த 55 மலையாள ரசிகர்கள்..


தனுஷுக்கு நாளுக்கு நாள் கேரளாவில் ரசிகர்வட்டம் அதிகமாகி வருகிறது.. அது தற்போது மீண்டும் ஒருமுறை ரிரூபனம் ஆகியுள்ளது.. தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வி.ஐ.பி-2’ தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் மலையாளத்திலும் வெளியாகிறது.. இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மோகன்லாலுக்கு சொந்தமான ஆசீர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது..

இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தனுஷ், அமலாபால், இயக்குனர் சௌந்தர்யா மூவரும் கொச்சிக்கு வந்திருந்தனர்.. இந்த தகவலை தனுஷின் ட்விட்டர் பக்கம் மூலம் முன்கூட்டியே அறிந்த பாலக்காட்தை சேர்ந்த 55 ரசிகர்கள் தனுஷை பார்க்க்க தனியாக ஒரு பஸ்ஸை பிடித்து கிளம்பி வந்திருந்தனர்..

அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த தனுஷ், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கேரளாவில் சுமார் 200 தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீசாகிறது.

Leave a Response