ஏ.எல்.விஜய்யின் ‘கரு’ பிரசவமாகும் தேதியில் மாற்றம்..!


ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் ‘கரு’. இந்தப் படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சௌரியாக நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் என ஒரே சமயத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை பிப்ரவரி 9ம் தேதியிலிருந்து 23ம் தேதிக்குத் தள்ளி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டியுள்ளதால், இரு மொழி நிலவரத்திற்கு ஏற்றபடி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Leave a Response