உதயநிதியின் ‘நிமிர்’ பட டைட்டிலை அறிவித்தார் மோகன்லால்..!


பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் உதயநிதியை வைத்து இயக்கிவரும் படத்திற்கு ‘நிமிர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை பிரியதர்ஷனின் நண்பரும், மலையாள சூப்பர்ஸ்டாருமான மோகன்லால் அறிவித்தார். மலையாளத்தில் பிரபலமான நமீதா பிரமோத், மற்றும் ஏற்கனவே நமக்கு தெரிந்த பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அத்துடன் இந்தப்படத்துக்கு அவரே வசனம் எழுதுகிறார். கிடாரி’ புகழ் தர்புகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மலையாளத்தில் கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் தான் இந்தப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response