மலையாள சினிமாவில் தற்போதும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவருக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அவருக்கு, நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கேரளா மாநில கவர்னர் சதாசிவம் டாக்டர் பட்டம் வழங்கினார்.
இதுகுறித்து விழாவில் பேசிய நடிகர் மோகன்லால், “கோழிக்கோடு எனது சொந்த ஊர். இந்த இடத்தில் கிடைத்திருக்கும் பாராட்டும் கௌரவமும் மிகுந்த நிறைவை அளிக்கிறது” என்றார்.