அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா..!


ஈரம், வல்லினம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய வர் அறிவழகன். இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மலையாள நடிகை மஞ்சு வாரியாரை வைத்து, தான் படம் இயக்கப்போவதாக கூறிவந்தார் அறிவழகன்.

அதுதான் இந்த கதையா..? அப்படியானால் மஞ்சு வாரியாருக்கு பதிலாகத்தான் நயன்தாரா நடிக்கிறாரா என்கிற கேள்வி எழுந்தது.. இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அறிவழகன்..

அதாவது இரண்டு விதமான த்ரில்லர் கதைகள் தன்னிடம் உள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்க இருப்பது சைகலாஜிகல் த்ரில்லர் படம் என்றும், மஞ்சு வாரியர் நடிக்க இருப்பது பேமிலி த்ரில்லர் என்றும், எந்தப்படமும் கைவிடப்படவில்லை.. யாருக்கு பதிலாக யாரையும் மாற்றவில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளார் அறிவழகன்.

Leave a Response