வைரமுத்துவுடன் நாங்கள் இருக்கிறோம் – ஒருங்கிணைந்த படைப்பாளிகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா பெற்றுக்கொண்டார். அருகில் எழுத்தாளர் சா.கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி தலைமையுரை ஆற்றினார்.

சென்னை லீ மெரிடியன் விடுதியில் நடந்த இவ்விழாவில் கவிஞர்கள் வா.மு.சேதுராமன் – முத்துலிங்கம் – அறிவுமதி – மனுஷ்யபுத்திரன் – சல்மா – இளையபாரதி – மதன்கார்க்கி – கபிலன்வைரமுத்து, எழுத்தாளர்கள் மாலன் – சுப.வீரபாண்டியன் – காவ்யா சண்முகசுந்தரம் – இமையம், நடிகர்கள் பாண்டியராஜன் – ஜோ மல்லூரி, தொழிலதிபர்கள் சிங்கப்பூர் முஸ்தபா – வசந்தபவன் ரவி – பாலு அய்யப்பன் – தமிழ்ச்செல்வன் – தமிழரசு – சிங்காரம் மற்றும் தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசியவர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்வு தமிழ்இருக்கைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி மட்டுமன்று, ஒன்று பட்ட தமிழர் இருப்பை அனைவருக்கும் உணர்த்திய நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

Leave a Response