ரெண்டாவது படத்தை ஒதுக்கிவிட்டு 3வது படத்தை இயக்கும் சி.எஸ்.அமுதன்..!


2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கவும் உள்ளது படக்குழு.

இதற்குமுன் சி.எஸ்.அமுதன் இயக்கிய ‘ரெண்டாவது படம்’ இன்னும் ரிலீஸாகாமல் பல வருடங்களாக முடங்கி கிடப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response