
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கெட்டிசெவியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது….
அமைச்சரவையில் மாற்றம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன்,இதுவரையிலும் அதுபோன்ற கருத்துகள் வெளிப்படவில்லை என்றார்.
குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார் குறித்து கேட்டபோது, என்னைப் பொறுத்தவரை 15 பேர் வருவார்கள் என்று சொன்னேனே தவிர எம்எல்ஏக்கள் என்று சொன்னேனா? கிடையாது.கருத்துகள் சொல்லுகிறபோது தெரிந்து தெளிவான முடிவுகளைத் தெரிந்தபிறகு மனு தரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் சரி, அதற்கு முன்னாலும் சில பேர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வருவதும், மற்ற இயக்கத்தில் இணைந்து கொள்வதும்,பின்னர் தேர்தலைச் சந்திப்பதும் நடைமுறையாக இருந்திருக்கிறது.
இதில் குதிரை பேரத்துக்கு வழியில்லை என்றார்.
அதிமுகவில் இருந்து பலர் போய்விடுவார்கள் என்ற அதிகப்படியான பயத்தினால் மனு கொடுத்திருக்கிறார்களா? என்று கேட்டபோது,உலகத்தை யாராலும் வெல்லமுடியும்.யாராவது ஒருவர் வெல்வார்கள்.ஆனால் காலத்தை எவராலும் வெல்லமுடியாது.காலம் என்ற புள்ளியில் கோலம் போடமுடியாது என்றார்.
இந்தப்பேட்டியின் மூலம்,அதிமுக ஆளுநரிடம் புகார் கொடுத்ததால் பயந்துபோய் முதலில் சொன்னதை மாற்றிப் பேசியிருக்கிறார் செங்கோட்டையன் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


